கிளாமரை கூட்டி கதையை குறைத்த சுந்தர்.சி.. அப்போ இதுவும் போச்சா
சுந்தர்.சி இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் காஃபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், அமிர்தா, ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் தோல்வியை தழுவியுள்ளது. ஆம், படம் பார்த்த பலரும் நல்லா இல்லை, ஒரு வாட்டி பார்க்கலாம் என்று தான் கூறி வருகிறார்கள். அதுமட்டுமின்றி விமர்சனங்களும் நன்றாக இல்லை. படத்தில் யார் யாரை காதலிக்கிறார், யார் யாரை திருமணம் செய்ப்போகிறார் என்பதை புரிந்துகொள்ளேவே முடியவில்லை என்று பலரும் கூறுகிறார்கள்.
அதுமட்டுமின்றி படத்தில் கதையின் சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டு, பெண்களின் கிளாமரை ஓவராக கூட்டி வைத்துள்ளாராம் சுந்தர்.சி. ஏற்கனவே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சுந்தர்.சி மீண்டும் ஒரு தோல்வி படத்தையே கொடுத்துள்ளாரே என்று சமுக வலைத்தளத்தில் பேச துவங்விட்டார்கள்.