5 ஏக்கர் வீடு, 500 ஏக்கர் தோப்பை இழந்த சத்யன்.. ஜமீன் வாரிசு நடிகரின் பரிதாப நிலை

Vijay Tamil Cinema Actors
By Bhavya Jul 10, 2025 05:30 AM GMT
Report

சத்யன்

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் சத்யன். தனது வெகுளித்தனமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் இளையராஜா இசையில் வெளிவந்த 'இளையவன்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

ஆனால் ஹீரோவாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்காததால் காமெடி நடிகராக அவதாரம் எடுத்தார்.

இதுவரை 70 படங்களில் நடித்திருந்தாலும் 'நண்பன்', 'துப்பாக்கி', 'நவீன சரஸ்வதி சபதம்' போன்ற படங்கள் இவரை மக்கள் மத்தியில் ரீச் செய்தது.

5 ஏக்கர் வீடு, 500 ஏக்கர் தோப்பை இழந்த சத்யன்.. ஜமீன் வாரிசு நடிகரின் பரிதாப நிலை | Comedy Actor Family Details

பரிதாப நிலை  

இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சத்யன் குறித்து தனது பேட்டியில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " மாதம்பட்டியின் ஜமீன்தார் தான் மாதம்பட்டி சிவக்குமார். இவருக்கு 5 ஏக்கர் வீடு, 500 ஏக்கர் தோப்பு என பல கோடி சொத்துகளுக்கு அதிபதி இவர். அவரின் ஒரே மகன் தான் சத்யன்.

5 ஏக்கர் வீடு, 500 ஏக்கர் தோப்பை இழந்த சத்யன்.. ஜமீன் வாரிசு நடிகரின் பரிதாப நிலை | Comedy Actor Family Details

மாதம்பட்டி சிவக்குமாரை அந்த ஊரில் ராஜா என்றும், சத்யனை குட்டி ராஜா என்றும் அழைப்பார்கள். சிவக்குமாருக்கு சினிமா மீது கொள்ளைப் பிரியம். அதனால் படங்களை தயாரிக்க தொடங்கினார்.

ஆனால், இவர் தயாரித்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஒருகட்டத்தில் சொத்துகளை விற்றுப் படம் எடுத்தார்.

இவ்வாறு சூழல் இருக்க சிவக்குமார் சில வருடங்களில் காலமானார். தந்தை இறந்தபின் சொந்த ஊரைக் காலி செய்து சென்னையில் தற்போது வாழந்து வருகிறார் சத்யன்.