அந்தமாதிரி நடிகையாக இருந்தேன்! இந்த காமெடி நடிகர் இப்படி ஆக்கிட்டாரு! சீரியல் நடிகை நீபா

vijay vadivelu asin kavalan Neepa
By Jon Apr 04, 2021 02:34 AM GMT
Report

சினிமாவில் குணச்சித்திரத்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் பல நடிகைகள் பிரபலங்களாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அப்படியாக, நடிகைகள் பலருக்கும் சினிமாவில் நல்ல பெயர் கிடையாது. அவர்களை ஒரு காட்சிப் பொருளாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களை மிகவும் தரக்குறைவாகவும் கேவளமாகவும் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று குணச்சித்திர நடிகை கூறியுள்ளார்.

விஜய் நடித்த காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நீபா. வடிவேலு கதாபாத்திரம் எந்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோ அதே அளவு நீபாவுக்கும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் வடிவேலு தானாம்.

அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படி வடிவமைத்து தனக்கும் அதில் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்ததால் தான் தன்னுடைய இமேஜ் தமிழ் சினிமாவில் மாறியதாக குறிப்பிட்டுள்ளார் நீபா. முன்னர் எங்கு சென்றாலும் கவர்ச்சி நடிகை என்று ஓரங்கட்டி விடுவார்கள் என்றும், ஆனால் காவலன் படத்திற்கு பிறகு தன்னுடைய இமேஜ் அப்படியே மாறி நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.