மகன்களால் கைவிடப்பட்ட நிலை!! ரஜினி கமல் பட நடிகை பிந்து கோஷ் மரணம்..

Indian Actress Death Tamil Actress Actress
By Edward Mar 16, 2025 01:30 PM GMT
Report

பிந்து கோஷ்

80, 90களில் நடித்து பிரபலமான நடிகைகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி அந்த காலத்தில் காமெடி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஒருவர் மகன்களால் கைவிடப்பட்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறார்.

மகன்களால் கைவிடப்பட்ட நிலை!! ரஜினி கமல் பட நடிகை பிந்து கோஷ் மரணம்.. | Comedy Actress Bindhu Gosh Passed Away

நகைச்சுவையில் 80களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை பிந்து கோஷ். சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் பல பிரச்சனைகளை சந்தித்து, மருத்துவ செலவிற்கும் சாப்பிட பணம் இல்லை என்று நடிகை ஷகீலா அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்திருந்தார்.

இதன்பின் KPY பாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு உதவிய நிலையில், சிகிச்சை பெற்று வந்த நடிகை பிந்து கோஷ் 76 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்திருக்கிறார். அவரது இறப்பிற்கு பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மகன்களால் கைவிடப்பட்ட நிலை!! ரஜினி கமல் பட நடிகை பிந்து கோஷ் மரணம்.. | Comedy Actress Bindhu Gosh Passed Away