வாய்ப்பு தரேன் ஹோட்டலுக்கு வா-னு சொன்ன இயக்குநர்!! வெளிப்படையாக சொன்ன நகைச்சுவை நடிகை...

Gossip Today Indian Actress Actress
By Edward Sep 09, 2025 11:00 PM GMT
Report

சினிமாவில் நடிகைகளுக்கு எதிரான அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இருப்பது இப்போது வரை அதிகரித்து வருகிறது. இதை பலரும் வெளியில் சொல்லாமல் சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். சிலர் சினிமா மீது இருக்கும் ஆசையால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முற்படுவார்கள். ஆனால் இதுகுறித்து பேசாமல் இருந்த நடிகைகள் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானப்பின் அடுத்தடுத்து புகார்கள் வெளியில் வரத்தொடங்கியது.

வாய்ப்பு தரேன் ஹோட்டலுக்கு வா-னு சொன்ன இயக்குநர்!! வெளிப்படையாக சொன்ன நகைச்சுவை நடிகை... | Comedy Actress Said She Called For An Adjustment

கீதா சிங்

அப்படி தெலுங்கு நகைச்சுவை நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த ஒரு மோசமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு இயக்குநர், பட வாய்ப்பு வேண்டும் என்றால் ஓட்டலுக்கு வா என அழைத்தார். தெலுங்கு நடிகையான கீதா சிங், 2006ல் கிதாகிதாலு என்ற படத்தில் அறிமுகமாகி கிதாகிதாலு கீதா சிங் என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. இதனையடுத்து நகைச்சுவை நடிகையாக நடித்து வரும் கீதா சிங், கஸ்டிங் கவுச் சவால்களை சந்தித்ததுண்டா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில், முன்னணி இயக்குநர் ஒருவர் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறினார். அந்த வார்த்தையை சொன்னதும் இனி பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்டது, ஒரு பிரகாசமான எதிர்காலம் எனக்கு இருக்கும் என்று நம்பினேன். ஆனால் அந்த இயக்குநர் என்னிடம் தவறாக பேசினார்.

வாய்ப்பு தரேன் ஹோட்டலுக்கு வா-னு சொன்ன இயக்குநர்!! வெளிப்படையாக சொன்ன நகைச்சுவை நடிகை... | Comedy Actress Said She Called For An Adjustment

முன்னணி இயக்குநர்

உங்களிடம் பேச வேண்டும் ஒரு ஹோட்டலுக்கு வா என்று அழைத்தார். அவர் அழைத்ததில் எனக்கு முரண்பாடு இருந்ததால், நான் மறுத்துவிட்டு ஓட்டலுக்கு வர முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன். அதன்பின் எனக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நான் நடிக்க வேண்டிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு வேறொரு நடிகைக்கு போய்விட்டது. அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் எனக்கு அன்று கிடைத்திருந்தால் என் சினிமா வாழ்க்கை இன்னும் சிறப்பானதாகவும், முன்னணி நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து இருப்பேன். ஆனால் நான் தவறான வழியில் செல்லவிரும்பவில்லை.

என் நடிப்பு திறமையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததால், தொடர்ந்து போராடினேன். அதன்பின் ஒருசில படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பல நடிகைகள் வாய்ப்புக்காக நேர்மையுடன் போராடி வருகிறார்கள் என்று கீதா சிங் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.