போட்டி போட்டு கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகைகள்! 38 வருஷத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்காத ஒரே ஒரு நடிகை!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து உலகளவில் தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் கவர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் படம் என்றாலே அந்த காலத்தில் தியேட்டருக்கு படையெடுத்து முந்துவார்கள். அப்படி பெரிய ஹீரோவாக திகழ சாதாரணம் விஷயம் கிடையாது. அப்படி இவர் படம் என்றாலே சினிமாவில் நடிகைகள் நான் தான் என்று போட்டிபோட்டு கால்ஷீட் பெறும் நிலையில் தற்போது வரை இருக்கிறது.
படத்தில் கமிட்டாகி அடுத்த நாளே பெரியளவில் பேசப்படும் நடிகைகளாகவும் சமபளம் கோடிகளில் பேசப்படும் என்பதற்காகவும் பிரம்மாண்டம் கிடைக்கும் என்பதற்கும் தான் ரஜினி படங்களுக்கு போட்டி. அப்படியாக தற்போது இருக்கும் மூத்த நடிகைகள் ரஜினி படத்தில் அனைவரும் நடித்து பிரபலமானார்கள்.
ஆனால், ஒரே ஒரு நடிகை மட்டும் ரஜினியுடன் ஜோடி சேராமல் இருந்துள்ளார். 1983 அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. தன்னுடைய சுறுசுறுப்பான மற்றும் துறுதுறுவென நடிக்கும் ஆற்றலை கொண்டு பலரை கவர்ந்து ஈர்த்தார்.
அப்படி நடித்த ஊர்வசி 38 வருட கால சினிமாவில் ரஜினி காந்துடன் நடிக்கும் வாய்ப்பினை எந்த இயக்குநர்களும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எப்படி இதை மறந்தார்கள் என்று பலரின் கேள்விக்குறியாக தற்போது இருந்து வருகிறது.