திருமணமாகி மண்டியிட்டு கைக்கூப்பும் நயன்தாரா.. வில்லன் நடிகருடன் கனெக்ட்-டாக்கிய விக்னேஷ் சிவன்..
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் காதலித்து 7 வருடங்களுக்கு பின் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி படங்களில் நடித்தப்பின் 4 மாதம் கழித்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். இதன்பின் ஜவான் படம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் இயக்குனர் அஸ்வின் சர்வணன் இயக்கத்தில் நயன் தாரா நடித்துள்ளார்.
படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் அதன் டீசர் வரும் 18 ஆம் தேதி நவம்பர் வெளியாகவுள்ளது. அதன் அறிவிப்பாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா மண்டியிட்டு கைக்கூப்பி வேண்டுவது போன்ற புகைப்படம் தான் அது. படத்தில் வில்லன் ரோலில் நடித்து வரும் நடிகர் வினெய் மற்றும் நடிகர் சத்யராஜ் இணைந்து நடித்துள்ளனர்.
பல பிரச்சனைகளுக்கு இடையில் திருமணத்திற்கு பின் நயன் தாரா நடிப்பில் வெளியாகவுள்ள படங்களில் இதுவும் ஒன்று. இதற்கு ரசிகர்கள் பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள்.
This Friday comes with a few surprises and scares. #CONNECT Teaser from November 18th. Stay CONNECTed!✨@VigneshShivn #Nayanthara @AnupamPKher #Sathyaraj #VinayRai @haniyanafisa @Ashwin_saravana @mk10kchary @prithvi_krimson @ARichardkevin @Kavitha_Stylist @kabilanchelliah pic.twitter.com/CKvYbBY1Ks
— Rowdy Pictures (@Rowdy_Pictures) November 15, 2022