இயக்குனரை மாற்ற சொன்ன சிம்பு? கடுப்பில் படத்தையே டிராப் செய்த தயாரிப்பாளர்

Silambarasan
By Edward Jun 02, 2022 06:59 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ரீஎண்ட்ரி கொடுத்த சிம்பு மாநாடு படத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நல்ல வரவேற்பு பெற்றார்.

அவர் நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு, கொரோனா குமாரு போன்ற படங்கள் உருவாகியது. சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் மட்டுமே இறுதி கட்டத்தில் இருக்கிறது.

ஆனால் சிம்பு தயாரிப்பாளர் ஐசரி கணேசனிடம் சென்று இயக்குனர் கோகுல் சரியில்லை என்றும் இயக்குனரை மாற்றுங்கள் என்று கூறியும் இருக்கிறார். இதனால் படத்திற்காக வேறொரு இயக்குனரை தேடுவதற்கு பதிலான படத்தையே மூட முடிவெடுத்திருக்கிறார் ஐசரி கணேஷ்.

சிம்பு கொடுத்த டார்ச்சரால் படம் டிராப்பாகி வேறொரு கதையை பண்ணலாம் என்று லிங்கு சாமி இயக்கத்தில் சிம்புவை வைத்து ஒரு படத்தினை கமிட் செய்திருக்கிறார் ஐசரி கணேஷ். ஆக மொத்தம் இவராவது நிலைப்பாரா சிம்பு என்று பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.