மமிதா பைஜுக்கு நான் போட்டியா? நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஓபன் டாக்..

Gossip Today Tamil Actress Mamitha Baiju Preity Mukhundhan
By Jai Sep 30, 2026 01:00 PM GMT
Report

ப்ரீத்தி முகுந்தன்

இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது அன்பில் அவன் படம். காதலும் ஆக்‌ஷனும் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் கலந்து கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ப்ரீத்தி முகுந்தன், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

மமிதா பைஜுக்கு நான் போட்டியா? நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஓபன் டாக்.. | Contest With Mamita Baiju Preity Mukundan Open

அதில், தமிழ் ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், என்னை அவர்களேற்றுக் கொண்டதற்கும் நன்றி, இன்னும் நல்ல நல்ல படங்கள் பண்ணனும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பயங்கரமான ஒரு பெர்ஃபார்மெண்ஸ் நடிகை என்றால் அது ராதிகா தான். எல்லா விதமான ரோல்களும் பண்ணுகிறார் என்று ஆச்சரியப்பட்டுள்ளேன்.

ரஜினி, கமல், அஜித், விஜய் , தனுஷ், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் எனக்கு நடிக்க ஆசை, இந்த லிஸ்ட் பெருசா இருக்கு, இருந்தாலும் தனுஷுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை சமீபத்தில் நடந்தது. மதுரை பின்னணியில் நடக்கும் கதைக்களம், இதுவரை நான் பண்ணாத ஒரு ரோல்.

மமிதா பைஜுக்கு நான் போட்டியா? நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஓபன் டாக்.. | Contest With Mamita Baiju Preity Mukundan Open

மமிதா பைஜு

மமிதா பைஜூவுடன் போட்டியெல்லாம் கிடையாது, அவர் திறமையான நடிகை. என் வயதிலுள்ள அவர் நல்ல கதைகள், படங்கள் எடுத்து இந்நிலைக்கு வந்துள்ளார்.

அவரை பார்க்கும்போதும் நாமும் அதுபோல் வர வேண்டும் என்ற உந்துதலாக அவர் இருக்கிறாராரே தவிர போட்டியாக நினைத்தது இல்லை. அடுத்து இரண்டு பெரிய படம் பண்ணுகிறேன், அதை அவர்களே அறிவிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.