குக் வித் கோமாளி வெற்றியாளர் இவரா? கனிக்கு வாழ்த்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் அனிதா!
பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக பணியாற்றி, சினிமாவிலும் சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்து வந்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில வெறுப்புகளையும் ரசிகர்களிடம் சந்தித்தார். தற்போது எப்போதும் இணையம் பக்கம் வந்து வந்து போகும் அனிதா சில டிவிட்களை போட்டு சர்ச்சையில் சிக்குவார்.
பிரபல நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி, இந்த வாரத்துடன் இறுதி போட்டி நடைபெற்று முடியவிருக்கிறது. இறுதி போட்டியின் ஹுட் முடிந்த நிலையில் யார் வெற்றியாளர் என்று பலர் கூறி வருகிறார்கள். இந்நிலையில், அனிதா சம்பந்த் நேற்று இரவு குக் வித் கோமாளி இறுதி போட்டியாளராக கனி’க்கு வாழ்த்துக்கள் என்று கூறி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இறுதி போட்டி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகாமல் இருக்கும் நிலையில் அனிதா அப்படி கூறி இருந்தார்.
இதற்கு பல ரசிகர்கள் இது உங்களுக்கு தேவையா? என் இதெல்லாம்? என்று அவரை திட்டித்தீர்த்து வந்தனர். இதையடுத்து அனிதா அந்த டிவிட்டர் பதிவினை டெலீட் செய்து விட்டார்.
சட்டமன்ற தேர்தல் பற்றி மேலும் சில சர்ச்சை டிவிட்களை போட்டு வருகிறார் அனிதா. அதில் எப்போது மாட்டுவாரோ?...