இந்த சூப்பர் ஷோவுக்காக தொலைக்காட்சி எடுத்த முடிவு! கடைசியில் அவங்க இல்லையேப்பா

Television Vijaytv Cookwithcomali Cookwithcomali3
By Edward Oct 22, 2021 08:05 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பெரும்பாலான சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் பெரிய ஹிட் கொடுப்பது வழக்கம். அப்படி சூப்பர் சிங்கர், கே பி ஒய் போன்ற காமெடி நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய வரவேற்பு பெற்றது குக் வித் கோமாளி.

கடந்த சீசனில் போட்டியாளர்களை விட கோமாளிகள் பெரிய இடத்தினை பிடித்து சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி தனது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது.

இந்த புது சீசனில் பல்வேறு புதிய மாற்றங்களையும் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், புதுவிதமான பரிமாணத்துடன் இந்நிகழ்ச்சி வர உள்ளதாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் குழுவினர் தகவல் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இந்நிகழ்ச்சிக்கான முதற்கட்ட வேலைப்பாடுகள் தொடங்கிவிட்டதாக குக் வித் கோமாளி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுவும் தீபாவளி அன்று துவங்கவுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.