காசு வாங்கிட்டு ஏமாற்றிய குக்வித் கோமாளி நடிகை.. எல்லாம் அந்த டிவி கொடுக்குற தைரியம் தான்..

Star Vijay Cooku with Comali Gossip Today
By Edward Oct 07, 2022 04:30 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்து பலர் படங்களில் நடித்து பிரபலமாகிவிடுகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரபலமாகி பல லட்சத்தில் காசு சம்பாதித்து வரும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.

காசு வாங்கிட்டு ஏமாற்றிய குக்வித் கோமாளி நடிகை.. எல்லாம் அந்த டிவி கொடுக்குற தைரியம் தான்.. | Cook With Comali Pavithra Misuse For Movie Chance

குக்வித்கோமாளி பவித்ரா

அப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் பவித்ரா லட்சுமி. கோமாளி புகழுடன் பவித்ரா செய்யும் ரொமான்ஸ் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்து வந்தார். இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சி மூலம் வாய்ப்பு கிடைத்து ஒரு படத்திலும் நடித்திருக்கிறார் பவித்ரா.

இந்நிலையில் ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்தில் நடிக்க பெங்களூருவிற்கு ஆடிஷன் செய்ய கூப்பிட்டுள்ளனர். அந்நிறுவனமும் டிக்கெட்டிற்கு நாங்களே புக் செய்து அனுப்பி விடுகிறோம் என்று கூறியுள்ளார்.

காசு வாங்கிட்டு ஏமாற்றிய குக்வித் கோமாளி நடிகை.. எல்லாம் அந்த டிவி கொடுக்குற தைரியம் தான்.. | Cook With Comali Pavithra Misuse For Movie Chance

அதற்கு பவித்ராவும் நான் வருகிறேன் என்று கூறியதோடு விமான டிக்கெட்டை நானே எடுத்து கொள்கிறேன் எனக்கு பேமெண்ட்டாக கொடுத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

13 ஆயிரம் அபேஷ்

அந்நிறுவனமும் டிக்கெட்டிற்கு காசு கொடுத்துள்ளது. ஆனால் ஆடிஷன் நடக்கவிருந்த அந்த நாளில் பவித்ரா பெங்களூருவிற்கு செல்லவில்லை. தயாரிப்பு நிறுவனமும் கால் செய்து ஏன் வரவில்லை என்று கேட்கவில்லை. இரு நாட்கள் கழித்து பவித்ரா அவர்களுக்கு கால் செய்து, என்னால் எதிர்ப்பாராத விதமாக என்னால் வரமுடியவில்லை.

இதனால் எனக்கு விமான டிக்கெட் கேன்சல் செய்ததால் 13 ஆயிரம் நஷ்டம் எனக்கு அதை கொடுங்கள் என்று பவித்ரா கூறியுள்ளாராம். விஜய் தொலைக்காட்சி என்றால் கெத்து வந்துவிடும் என்று சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் கூறியுள்ளார்.