நீ இன்னும் திருத்தலயா அஸ்வினு.. லேட்டஸ்ட் ட்விட்டால் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Ashwin controversy Cooku with Comali
By Parthiban.A Jan 07, 2022 05:30 PM GMT
Report

குக் வித் கோமாளி அஸ்வினை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இரண்டாம் சீசன் குக் வித் கோமாளியில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். ஷிவாங்கி உடன் அவர் கெமிஸ்ட்ரி அதிகம் பேசப்பட்டது. 

குக் வித் கோமாளி பிரபலங்கள் பலருக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்த நிலையில் அஸ்வினும் பல படங்களில் ஒப்பந்தம் ஆனார்.

அவரது படவிழாவில் தான் 40 பேரிடம் கதை கேட்டு தூங்கிவிட்டதாக கூறியது அவரை சர்ச்சையில் சிக்க வைத்தது. அவரை கண்டபடி இணையவாசிகள் ட்ரோல் செய்தனர். அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார். ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து ஒரு ஆர்வத்தில் அப்படி பேசிவிட்டதாக அவர் கூறி இருந்தார்.

சர்ச்சை ஓரளவு தற்போது ஓய்ந்துவிட்டது. இந்நிலையில் அஸ்வின் ட்விட்டரில் அந்த விழா பற்றி பதிவிட்டு இருக்கிறார். ரசிகர்களின் குரல்கள் தற்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறது என தெரிவித்து உள்ளார்.

அதை பார்த்து நெட்டிசன்கள் நீ இன்னும் திருந்தலயா அஷ்வினு? என கேட்டு இருக்கின்றனர்.