கோமாளி கிடைத்த வாய்ப்பு? புலியுடன் குடும்பம் நடத்த பிலிபைன்ஸ் பறக்கும் புகழ்!

comali valimai pugazh cookwiithcomali mrzookeeper
By Edward Mar 20, 2022 10:00 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்வித் கோமாளி மூலம் பிரபலமாகி மக்கள் மனதை ஈர்த்தவர் புகழ். முதல் சீசனில் ஆரம்பித்து புகழுக்கு கிடைத்த நல்ல வரவேற்பால் சமீபத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதற்கு முன் சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் படங்களில் சிறு கதாபாத்திரத்திலும்நடித்து வந்தார். இந்நிலையில் புகழ், மிஸ்டர் ஹூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஒரு புலியுடன் கதை செல்லும் என்பதால் அதனுடன் 10 நாட்கள் ட்ரைனிங் கொடுக்கவுள்ளது.

அதற்காக பிலிபைன்ஸ் நாட்டிற்கு செல்லவிருக்கிறார். முதல் கட்டப்படப்பிடிப்பு ஊட்டில் ஆரம்பிக்க இரண்டாம் கட்டப்பிடிப்பில் பிலிபைன்ஸ் செல்லவுள்ளார்களாம். ஷமிதாப் படத்தின் கேமராமேன் தன்வீர் பணியாற்றவுள்ளார்.

என்னவளே படத்தின் இயக்குனர் இப்படத்தினை இயக்க டிக்கொலோனா படத்தில் நடித்த ஷெரின் கதநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். மார்ச் 20ல் இப்படத்தின் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இதை சமீபத்தில் நடந்த குக்வித் கோமாளி 3 எபிசோட்டில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டு பேசியுள்ளார் புகழ்.

GalleryGallery