உதவி செய்வது, பிச்சை எடுக்காமல்.. KPY பாலா பற்றி கூல் சுரேஷ் இப்படி சொல்லிட்டாரே!

Tamil Cinema KPY Bala Cool Suresh
By Bhavya Oct 01, 2025 09:30 AM GMT
Report

 பாலா

தமிழ் சின்னத்திரையில் தனது திறமையால் நுழைந்து இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக இருப்பவர் பாலா.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ரைமிங், டைமிங் காமெடிகள் செய்து அசத்தி வந்தவருக்கு அதிகம் பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

கோமாளியாக பாலா செய்த கலாட்டா எல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். ஆனால் இப்போதெல்லாம் தனியார் நிகழ்ச்சிகளிலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தான் வருகிறார், குக் வித் கோமாளி பக்கம் வருவதில்லை.

தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கிவிட்டார். தொடக்கத்தில் இருந்து பாலா தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் மற்றவர்களுக்கு உதவ கொடுத்து வருகிறார்.

உதவி செய்வது, பிச்சை எடுக்காமல்.. KPY பாலா பற்றி கூல் சுரேஷ் இப்படி சொல்லிட்டாரே! | Cool Suresh About Kpy Bala Details

இப்படி சொல்லிட்டாரே! 

அவர் இப்படி செய்வதற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என கூல் சுரேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், " பாலா செய்து வரும் உதவி எல்லாம் சரி தான். ஆனால் உதவி செய்ய பணம் எப்படி வருகிறது என்று மட்டும் சொல், நானும் கூல் சுரேஷ் நற்பணி மன்றத்தில் உதவி செய்து வருகிறேன்.

ஆனால் அதை வீடியோ எடுத்து நான் போடுவது இல்லை. இந்த டெக்னிக் மட்டும் என்ன என்று சொல் அதை தெரிந்து கொண்டு நானும் பிச்சை எடுக்காமல் உதவி செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.  

உதவி செய்வது, பிச்சை எடுக்காமல்.. KPY பாலா பற்றி கூல் சுரேஷ் இப்படி சொல்லிட்டாரே! | Cool Suresh About Kpy Bala Details