மேடையில் தொகுப்பாளியிடம் எல்லைமீறி டார்ச்சர் செய்த நடிகர்!! மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிக்கையாளர்
காமெடி நடிகராக திகழ்ந்து வரும் கூல் சுரேஷ் சமீபகாலமாக முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்களை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வெளியான மார்க் ஆண்டனி படத்தினை தியேட்டரில் பார்த்துள்ளார்.
படம் முடிந்து வெளியே வந்ததும் பாம்பு பொம்மையை கையில் வைத்துக்கொண்டு, விஷாலின் அனகொண்டாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டேன் என்று கூறி முத்தம் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதேபோல் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகவுள்ள சரக்கு படத்தின் இசை மற்றும் திரைக்கண்ணோட்ட வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினியின் கழுத்தில் மாலையை போட்டு ஷாக் கொடுத்தார். அதனால் அதிர்ச்சியான அந்த தொகுப்பாளினி முகம் சுளித்தார்.
இதை கண்ட மன்சூர் அலிகான் அவரிடம் ஏற்கனவே பேசியிருக்கிறேன் என்று கூறியதற்கு அப்படியெல்லாம் இல்லை என்றும் கூறினார் அந்த தொகுப்பாளினி.
இதனால் கோபத்தில் பத்திரிக்கையாளர்கள் கத்த, கூல் சுரேஷை கண்டித்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார் மன்சூர் அலிகான்.
அதன்பின் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டு தனியாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Producers should stop paying him to attend functions and promote films, what he has done on the stage to the girl is clearly an ABUSE! pic.twitter.com/afU75f0tAP
— LetsCinema (@letscinema) September 20, 2023