அனகோண்டானு சொன்னா விஷால்ன்னு நினைச்சிடாதீங்க!! சர்ச்சையை ஏற்படுத்திய காமெடி நடிகர்..

Vishal Gossip Today
By Jai Nov 28, 2022 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி வில்லனாக சிறு ரோலில் நடித்து தற்போது சிம்புவின் தீவிர ரசிகராக இருந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருபவர் கூல் சுரேஷ்.

சிம்புவின் மாநாடு படத்தில் ஆரம்பித்து தற்போது பத்து தல படம் வரை சிம்புவின் படத்திற்காக வித்தியாசமாக பிரமோஷன் செய்து வந்தார். இடையில் சர்ச்சைகளிலும் சிக்கி வரும் கூல் சுரேஷ், சமீபத்தில் பாம்பாட்டம் என்ற படத்தின் டிரைலர் லான்ச் விழாவில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

அப்போது பாம்பு போல் செய்கை செய்து பேசிய கூல் சுரேஷ், படம் ரிலீசாகும் போது ஒரு அனகோண்டாவை எடுத்து வருவேன் என தெரிவித்தார்.

அனகோண்டான்னு சொன்னதும் விஷால் பத்தி சொல்றன்னு அப்படி இப்படின்னு சொல்லிடாதீங்க என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகை ஸ்ரீ ரெட்டி விஷாலை அனகோண்டா என்று கூறியது சர்ச்சையானதை தொடர்ந்து கூல் சுரேஷ் பேசிய இந்த விசயமும் தற்போது வைரலாகி வருகிறது.