குக் வித் கோமாளி போட்டுயாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா!! ஷிவாங்கிக்கு இத்தனை ஆயிராமா?
ஸ்டார் விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி சமையலோடு சேர்ந்து கோமாளிகள் செய்யும் அட்ராசியால் தான் இந்த அளவிற்கு நிகழ்ச்சி மிகப்பெரிய இடத்தினை பெற்று வருகிறது.
தற்போது சீசன் 4 சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு ஒரு எபிசோட்டிற்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சியில் அதிகப்படியான தொகையை சம்பளமாக பெறுவது மைம் கோபி தானாம். இரு எபிசோட்டிற்காக அவர் சுமார் 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம்.
அவருக்கு அடுத்து நடிகை ஷெரின் 35 ஆயிரம் ரூபாயும், நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு 35 ஆயிரமும், நடிகை விசித்ராவுக்கு 30 ஆயிரம் சம்பளமாகவும் பெறுகிறார்கள்.
மேலும் தமிழ் பேசும் பிரெஞ்சி பிரபல நடிகை ஆண்ட்ரியாவுக்கு 30 ஆயிரம் சம்பளமும், வலிமை படத்தில் அஜித் தம்பியாக நடித்த நடிகர் ராஜ் ஐயப்பனுக்கு 26 ஆயிரம் சம்பளமும் கொடுக்கப்படுகிறது.
மேலும் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஜே விஷாலுக்கு 25 ஆயிரமும், கோமாளியாக இருந்து குக்-ஆக மாறிய ஷிவாங்கி 20 ஆயிரம் சம்பளமாகவும் பெறுகிறாராம். இதில் அதிக கண்டெண்ட் கொடுக்கும் ஷிவாங்கி தான் குறைவான சம்பளம் பெறுகிறார் என்பது சற்று ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.