கூலி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்தது. இப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் இருந்தாலும் படத்தை கொண்டாடினார்கள்.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட வசூலில் இப்படம் வேட்டையாடி வருகிறது. அதுதான் ரஜினிகாந்தின் மாஸ் என சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கூலி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்திருக்கும் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதல் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்திருந்தது.
தற்போது 17 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கூலி இதுவரை உலகளவில் ரூ. 509 கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ரஜினி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.