கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இந்த வாட்ச் இத்தனை கோடியா!! என்ன பிராண்ட் தெரியுமா?
கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகல் அணியின் பிரபல கால் பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் UEFA நேஷ்னல் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5 - 3 என்ற கோல் கணக்கில் கோப்பையை வென்றது.
61வது நிமிடத்தில் ஒரு கோலடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்த ரொனால்டோ, 88வது நிமிடத்தில் மைதானைத்தை விட்டு வெளியேறினார். பின் பெனாட்சி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் அணி கடைசி வாய்ப்பை கோலாக்கியதும் உணர்ச்சிவயப்பட்ட ரொமாண்டோ கண்ணீர் விட்டு அழுதபடி தரையில் விழுந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாத நிலவரப்படி கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நிகர சொத்து மதிப்பு 800 மில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல சொகுசு கார், பங்களா, வாட்ச் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் ரொனால்டோ, சமீபத்தில் அணிந்து சென்ற வாட்ச் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜேக்கப் அண்ட் கோ வாட்ச்
ஜேக்கப் அண்ட் கோ பிராண்டின் Twin Turbo Furious Baguette என்ற மாடல் வாட்ச் தான் ரொனால்டோ அணிந்துள்ளார். அதன் மதிப்பு 1,300,000 அமெரிக்க டாலராம். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 11 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.