தென்னிந்தியாவில் தோல் நிறத்தை வைத்து வாய்ப்பு!! ராதிகா ஆப்தே பளீச்..

Keerthy Suresh Radhika Apte Tamil Cinema Gossip Today
By Jai Oct 30, 2026 02:30 AM GMT
Report

ராதிகா ஆப்தே

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராதிகா, தமிழில், ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பல வெப் தொடர்களில் போல்ட்டான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ராதிகா, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து அக்கா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் அக்டோபர் 30 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

தென்னிந்தியாவில் தோல் நிறத்தை வைத்து வாய்ப்பு!! ராதிகா ஆப்தே பளீச்.. | Radhika Apte Fair Complexion Affor In South Cinema

இந்நிலையில் அக்கா வெப் தொடரின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் ராதிகா.

தென்னிந்தியாவில்

அதில், தென்னிந்திய சினிமாவில் அதிகம் நடிக்காதது ஏன் என்றும் தென்னிந்திய படங்களில் வட இந்திய நடிகைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது குறித்தும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ராதிகா, தோல் நிறத்தை மையமாக வைத்து நடிகைகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வட இந்திய நடிகைகள் வெள்ளையக இருப்பதால் தான் தென்னிந்திய படங்களில் அவர்களை நடிக்க வைக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் தோல் நிறத்தை வைத்து வாய்ப்பு!! ராதிகா ஆப்தே பளீச்.. | Radhika Apte Fair Complexion Affor In South Cinema

அதேசமயம் என்னை பொருத்தவரை நான் அதிகம் வெள்ளையாக இல்லை. அதோடு தென்னிந்தியாவில் ஏராளமான நடிகைகள் இருக்கும்போது அவர்களுக்கு பதிலாக வட இந்திய நடிகைகள் ஏன் தேடி சென்று நடிக்க வைக்க வேண்டும்? தென்னிந்திய பெண்கள், அழகானவர்கள், திறமையானவர்கள், சிறப்பாக நடிக்கக்கூடியவர்கள்.

அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். வட இந்திய நடிகைகளை படங்களில் நடிக்க வைத்துவிட்டு அவர்களுக்கு பதிலாக இன்னொருவரை டப்பிங் பேச வைப்பது ஏன்? ஒரு படத்திற்கு அந்த ரோலுக்கு பொருத்தமான நடிகையை தேர்வு செய்வதைவிட தோல் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்படுவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.