ஒரே ஒரு படம் தான் பிளாட்பாரத்திற்கு வந்த குக்கூ பட நடிகர்! பிச்சை எடுக்கும் நிலை..

tamilcinema cuckoo ilangovan attakathi dinesh
By Edward Mar 10, 2022 09:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கலைஞர்கள் ஒரு படத்தின் அறிமுகமாகுவதே பெரிய விஷயம். அதிலும் கதாநாயகனுடன் பயனுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து அதன்பின் காணாமல் போகும் கலைஞர்களும் உண்டு. அந்த வகையில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் குக்கூ பட நடிகர் ஒருவர்.

நடிகர் அட்டக்கத்தி தினேஷ், மாளவிகா நாயர் இருவரும் கண் பார்வையற்றவர்களாக குக்கூ படத்தில் நடித்திருப்பார்கள். தினேஷுக்கு நண்பராக படம் முழுவதும் பயனித்திருப்பவர் தான் இளங்கோவன். உண்மையில் ஒரு கண் இழந்த இளங்கோவன் கண்பார்வையற்றவராக அப்படத்தில் நடித்திருப்பார்.

அந்த ஒரு படத்திற்கு பிறகு கொரோனா காலகட்டத்தில் வாய்ப்பினை தேடியும் கிடைக்காமல் காசு எதுவும் இல்லாமல் பிளாட்பாரத்தில் பாட்டு பாடி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தஞ்சாவூரில் இருந்து சென்னை வந்தார். தற்போது பாட்டு பாடி பிழைக்கும் காசில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருகிறார். இவரை போன்ற கலைஞர்களுக்கு தமிழ் சினிமாவின் எதாவதொரு சங்கத்தினர் உதவி கொடுப்பார்களா என்று ஏங்கி வருகிறார்கள் பல கலைஞர்கள்.

Gallery