ஒரு படம் பண்ணிட்டு ஓவர் ஆட்டிடூட் காட்டும் !. உண்மை முகத்தை உடைத்த பிரபலம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 சீசன் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்ட பிரபலமானவர் தான் பவித்ரா.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சதிஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் வித்தகன், 'குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகை பவித்ரா, சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் மலையாளம் படத்தில் ஒன்றில் அவர் நடித்திருந்தார்'.
இவரை ஒரு நிறுவனம் ஆடிஷனுக்கு அழைத்துள்ளது. அப்போது அவர் ஃபிளைட் சார்ஜ் நான் போட்டுகிறேன், எனக்கு பணம் மட்டும் அனுப்பிவிடுங்க என்று கூறியுள்ளார். அவர்களும் பணம் போட்டு உள்ளனர். ஆனால் கடைசியில் பவித்ரா ஆடிஷன் செல்லவில்லையாம்.
இதனால் தற்போது சினிமா வட்டாரங்களில், ஒரு படம் பண்ணிட்டு இவ்ளோ ஆட்டிடூட்டு காட்டறாங்க என்று விமர்சித்து வருவதாக வித்தகன் கூறியுள்ளார்.