எல்லாத்துக்கும் காரணம் அந்த 2 பேர்தான்!! உருக்கமாக வெளியிட்ட CWC நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிகமாக கவர்ந்து வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது. அதிலும் கோமாளிகள் போடும் அட்டூழியங்களே இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியை அமைத்து தருகிறது.
நடைபெற்று வரும் 4வது சீசனில் தற்போது இறுதி போட்டியாளர்களை தேர்வு செய்து வரும் சுற்று நடைபெற்று வருகிறது. அப்படி முதல் ஃபைனலிஸ்ட்டாக நடிகை விசித்திரா தேர்வானார்.
அதன்பின் கடந்த எபிசோட்டில் இரண்டாம் இறுதி போட்டியாளராக மைம் கோபியும், 3வது போட்டியாளராக சிவாங்கியும் தேர்வானார்கள். நான்காவது போட்டியாளராக ஸ்ருஷ்டி டாங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கிரண் வெளியேறுவார் என்று பார்த்தால் அவரை 5வது போட்டியாளராஅ அறிவித்து ஷாக் கொடுத்தனர் நடுவர்கள்.
தற்போது இதனால் சந்தோஷத்தில் இருந்த ஸ்ருஷ்டி டாங்கே, அவரது சமுகவலைத்தள பக்கத்தில் எமோஷ்னலான ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில் தேங்க்யூ மோனி மற்றும் தங்கத்துரை, இரண்டு பேரையு நான் ரொம்ப காதலிக்கிறேன் என்றும் நான் வென்ற போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவை எல்லாத்துக்கும் காரணம் மோனி மற்றும் தங்கத்துரை தான் ஐ லவ் யூ என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.


