என்னது அஜித் ஆசி பெற்றாரா? இது எப்ப நடந்தது..

Ajith Kumar
By Parthiban.A May 01, 2022 06:16 PM GMT
Report

நடிகர் அஜித் இன்று பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள்.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டரில் அஜித்துக்கு வாழ்த்து கூறி உள்ளார்.

"இதயதெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்களின் ஆசியை பெற்றவரும்,சமூக கருத்துக்களை எண்ணற்ற‌ இளைஞர்களுக்கு 'வலிமை' போன்ற திரைப்படங்கள் மூலம் எடுத்துரைத்து நல்வழிப்படுத்தும் சகோதரர் #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் அஜித் எப்போது அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கினார் என கேட்டு வருகின்றனர்.