புடவையா? லுங்கியா? நடிகை ஜோதிகா ஆடையை கலாய்க்கும் ரசிகர்கள்..
ஜோதிகா
சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின் இவர் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
டப்பா கார்டல்
சூர்யா - ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் புது வீடு எடுத்து செட்டிலாகிவிட்டார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜோதிகா, டப்பா கார்டல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
அத்தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் ஜோதிகா பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான கோட் ஆடையணிந்து சென்றுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் புடவையா? கோட்டா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.