திருமணமாகி 2 மாதம் தான் ஆகுது!! நாக சைதன்யா மனைவி சோபிதாவின் அதிரடி முடிவு!!
நாக சைதன்யா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா, சமீபத்தில் தண்டேல் படத்தில் நடித்திருந்தார். படமும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி வருகிறது. நாக சைதன்யா நடிகை சமந்தாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று சினிமாப்படங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் சோபிதா கிளாமர் ரோலில் நடித்தும், கவர்ச்சி போட்டோஷூட்டிலும் ஈடுபட்டும் வந்தார்.
சோபிதாவின் அதிரடி முடிவு
திருமணத்திற்கு பின் அவரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமணமாகி 2 மாதங்களாகியுள்ள நிலையில் முக்கிய முடிவுகளை சோபிதா எடுத்துள்ளாராம்.
திருமணத்திற்கு முன் கவர்ச்சியாக திரையில் தோன்றியவர், இனிமேல் அப்படியான வேடங்களில் நடிப்பதில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம். குறிப்பாக நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மாட்டர் என்று கூறப்படுகிறது.