டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினாரா வரலட்சுமி, சினேகா!! என்ன காரணம்?
டான்ஸ் ஜோடி டான்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
மிர்ச்சி விஜய், மணிமேகலை தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் பாபா மாஸ்டர், சினேகா, வரலட்சுமி போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். இந்தவாரம் எபிசோட்டில் போட்டியாளர்கள் சிம்பிள் Property Round வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக ஆடாதவர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள்.
வரலட்சுமி, சினேகா
இந்நிலையில், இந்த வார எபீசோட்டில் நடுவர்களான சினேகாவும் வரலட்சுமியும் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக, நடிகை ரம்யா நம்பீசனும் நடிகை நமீதாவும் நடுவர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏன் சினேகா, வரலட்சுமி வரவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், வரலட்சுமி ஹாலிவுட் படத்தில் கமிட்டாகி இருப்பதால், அப்படத்தின் வேலையாக இலங்கை சென்றிருக்கிறாராம். மேலும் சினேகா சில வாரங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதால் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.