டான்ஸ் ஆடும் பெண்ணை படுக்கைக்கு அழைத்த நடன இயக்குனர்? இதுக்கு தான் சமந்தா வேண்டாம்னு சொன்னரா?
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் புஷ்பா. வசூல் ரீதியாக பான் இந்தியா படமாக மிகப்பெரிய சாதனையை எட்டியது.
இந்நிலையில் இப்படத்தின் பாடல்களும் மக்கள் மனதில் நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்போது இப்படத்தின் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீது துணை நடன இயக்குனராக பணியாற்றி பெண் ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளார்.
அதன் சார்ஜ்ஷீட்டினை போலிசார் நீதுமன்றத்தில் சமர்பித்துள்ளனர். தன்னை அலுவலகத்தில் வரவழைத்து ஆபாச படம் பார்க்க தூண்டியும், மோசமாக பேசியும், உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய இடத்திற்கு வளர வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என கூறியதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இதனால் என்னை நடன இயக்குனர் சங்கத்தில் இருந்து அப்பெண்னை நீக்கியுள்ளாராம் கணேஷ் ஆச்சார்யா.
ஆனால் கணேஷ் ஆச்சார்யா அந்த புகாரை மறுத்திருந்தார். "க்ரூப் டான்ஸ் ஆடும் பெண்களில் ஒருவர் தான் அவர், வேறு எதுவும் அவரை பற்றி எனக்கு தெரியாது" என கூறி இருக்கிறார்.
தற்போது சார்ஜ் ஷீட் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறது என்பது இனி தான் தெரியவரும்.