வடிவேலுவுடன் காதல் கிசுகிசு.. வைகைப்புயலுடன் பல படங்களில் நடித்து மாட்டிக்கொண்ட பிரபல நடிகை
நெருப்பு கூத்தடிக்குது நடிகை
தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் நடன கலைஞராக திகழ்ந்து பல படங்களில் பணியாற்றி பிரபலமானவர் நடிகை லேகா ஸ்ரீ. துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் நெருப்பு கூத்தடிக்குது பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகையாக திகழ்ந்தார்.
அதன்பின் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தார். சமீபத்தில் நடிகை ஷகிலா எடுத்த பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் காதலில் இருந்த நபர் யார் என்ற கேள்விக்கு என் கணவர் தான் என்று சிரிப்புடன் கூறினார்.

வடிவேலுவுடன் காதல்
நானாக இருந்தேன் என்றால் காதலர் யாரென்று மறைக்காமல் கூறிவேன் என்று ஷகிலா பட்டென்று கூறினார். அதன்பின் காதல் கிசுகிசு பற்றி கேட்டதற்கு, நானும் வடிவேலு சாரும் காதலிப்பதாக பலர் என்னிடம் செய்தியை பார்த்ததாக கூறினார்கள் என்று லேகா ஸ்ரீ கூறியுள்ளார்.
மேலும் வடிவேலு சார் எனக்கு நண்பர். ஒரு படத்தில் நடித்த போது என் அண்ணன் இறந்த விசயம் வடிவேலு சாருக்குத்தான் தெரிய வந்தது. ஆனால் நான் ஷூட்டிங்கில் இருந்தேன்.
என்னிடம் அதை எப்படி கூறுவது என்று 2 மணி நேரம் தயங்கி அதன்பின் கூறி வழி அனுப்பி வைத்தார் வடிவேலு என்று கூறியுள்ளார் லேகா ஸ்ரீ.