கடைசி வரை முரளி முகத்தை கூட பார்க்கதது ஏன்? டேனியல் பாலாஜியே கூறிய தகவல்
டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் ரகுவரன் போல் வந்திருக்க வேண்டிய மிகச்சிறந்த நடிகர். எந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தையும் மிக எளிதாக நடித்து அசத்தக்கூடியவர்.
இந்நிலையில் டேனியல் பாலாஜி சமீபத்தில் மாராடைப்பால் இறந்தது ஒட்டு மொத்த தமிழ் திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிலும் இவர் நெருங்கிய நண்பர்களான வெற்றிமாறன், கௌதம் மேனன் அவர்களுக்கு மிகப்பெரும் கவலையை இந்த நிகழ்வு கொடுத்துள்ளது.
டேனியல் பாலாஜி நடிகர் முரளியின் சொந்தக்காரன், அதிலும் தம்பி முறை வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், முரளியை டேனியல் பாலாஜி பல வருடங்களாக பார்க்கவே இல்லையாம், இதுக்குறித்து அவரே சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், முரளி என் அண்ணன் என்றாலும், எனக்கு சிபாரிசுக்காக போய் நிற்பது பிடிக்காது, அவரை நான் யதார்த்தமாக பார்த்தாலும் எல்லோரும் சிபாரிசுக்காக சென்றான் என்பார்கள்.
அதன் காரணமாகவே அவரை பார்ப்பதை நான் தவிர்த்தேன் என்று டேனியல் பாலாஜி பேசியுள்ளார்.
You May Like This Video