என்னால் வாழ முடியாது.. விஷம் கொடுங்க!! கதறி அழுத நடிகர் தர்ஷன்..
நடிகர் தர்ஷன்
கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன், விஜயலட்சுமி என்ற மனைவியும் மகனும் இருக்கும் நிலையில் அவர்களை விட்டு பிரிந்துவிட்டு பவித்ரா கவுடாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதன்பின் பவித்ரா கவுடா பற்றி சமூகவலைத்தளத்தில் ரேணுகாசாமி என்ற இளைஞர் மோசமாகவும் ஆபாசமான போட்டோக்களை அனுப்பி கமெண்ட் செய்திருந்தார்.
இதனையடுத்து ரேணுகா சுவாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டு, உடலை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த வழக்கில் நான்கு பேர் தானாக முன்வந்து ஆஜராகி, பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறியதை அடுத்து சந்தேகித்த போலிசார் விசாரணை தீவிரப்படுத்தினர்.
மனைவி பவித்ரா கவுடா
கன்னட நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உட்பட 13 பேரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரேணுகா சுவாமி கொலை வழக்கில், பவித்ரா காலணியில் ரேணுகா சுவாமியை மிதித்து துன்புறுத்தியதும், நக கருவியை பயன்படுத்தி, ரேணுகா சுவாமியின் ஆண் உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி, விதைப்பைகளை அடித்து சிதைத்து, பல கொடுமைகளை செய்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
பவிதாவிற்கு இன்ஸ்டாகிராமில் ரேணுகா சுவாமி, அவரை உடலுறவுக்கு அழைத்ததும், ஆபாசமாக அனுப்பியதும் காரணம் என்று சொல்லப்படுகிறது. தர்ஷன் உட்பட 7 பேருக்கு ஜாமீன் வழங்கபட்டது.
இந்த ஜாமீனை எதிர்த்து கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரித்த உச்சநீதிமன்றம் தர்ஷனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. தற்போது தர்ஷன் சார்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் 2 மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஷம் கொடுங்க
அதில், தனக்கு வீட்டு உணவை அனுமதிக்க வேண்டும் என்றும் பெங்களூரு சிறையில் இருந்து பல்லாரி சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்த மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தநிலையில் தர்ஷன் வீடியோ கான்பரன்சிங் வழியாக ஆஜராகினார்.
அப்போது அவர், பல நாட்களாக சூரிய ஒளியை பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் என்னால் உயிர் வாழவே முடியாது, தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள், அதை குடித்துவிட்டு இறந்துவிடுகிறேன் என்று கதறி அழுதுள்ளார் தர்ஷன்.
இதைக்கேட்ட நீதிபதிகள், என்னிடம் இப்படி எல்லாம் பேசக்கூடாது, நான் உங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர சிறை கண்காணிப்பாளரிடம் கூறுகிறேன் என்று கூறியிருக்கிறார்.