முதலில் இந்த டிவி தான் தூக்கிவிட்டதா? நடிகை ராதிகாவின் இந்த சீரியலில் தொகுப்பாளினி டிடி!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. ஜோடி நம்பர் 1, காஃபி வித் டிடி, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரியளவில் ஃபேமஸ் ஆனார் டிடி.

இதையடுத்து ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தும் விட்டார். இதனைதொடர்ந்து பல சர்ச்சைகள் வந்தாலும் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார்.

தற்போது அவர் பற்றி சில புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரபல சன் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு முன் நடிகை ராதிகா நடித்த சீரியல் செல்வி. அந்த சீரியலில் ராதிகாவிற்கு தங்கையாக நடித்துள்ளார் டிடி. அப்போது அவர் பெரிதாக பேசப்படவில்லை. இதையடுத்து தான் விஜய் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளார் டிடி.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்