ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை..நீக்கிட்டாங்க!! நடிகை டாப்ஸி ஓபன் டாக்.

Taapsee Pannu Gossip Today Bollywood Indian Actress
By Jai Sep 26, 2026 12:08 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுக் பக்கம் சென்று டாப் நடிகையாக மாறியவர்தான் நடிகை டாப்ஸி பன்னு. சமீபத்தில் தனக்கு நடந்த பல விஷயங்களை பேட்டிகளில் வெளிப்படையாக பகிர்ந்து வருவார்.

சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித்திற்கு அளித்த பேட்டியொன்றில் ஒரு படத்தில் நீக்கப்பட்டதற்காக காரணம் குறித்து பேசியிருக்கிறார்.

ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை..நீக்கிட்டாங்க!! நடிகை டாப்ஸி ஓபன் டாக். | Taapsee Spoken Openly Her Cinematic Experiences

ஹீரோவின் மனைவி

அதில், ஒரு முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகினேன், பின் திடீரென நீக்கப்பட்டேன். ஏன் என்று கேட்டபோது, அந்த ஹீரோவின் மனைவிக்கு உங்களை பிடிக்கவில்லை என்று கூறினார்கள். நடிகரின் மனைவிக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை என்று எனக்கு இதுவரை தெரியாது. மற்றொரு படத்தில் ஏற்கனவே கமிட்டாகி என் கால்ஷீட்டையும் ஒதுக்கியபோது, எனக்குத் தெளிவான எந்த காரணமும் சொல்லாமல் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன்.

கதாநாயகனின் அழுத்தம் காரணமாகவே நான் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதினேன், ஆனால் ஊடகங்கள் வாயிலாகவே நான் அப்படத்தில் இருந்து நீக்கபட்ட செய்தியை அறிந்தேன். ராசி இல்லாத நடிகை என்ற விமர்சனத்தையும் எதிர் கொண்டிருக்கிறேன்.

ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை..நீக்கிட்டாங்க!! நடிகை டாப்ஸி ஓபன் டாக். | Taapsee Spoken Openly Her Cinematic Experiences

சினிமாத்துறைக்கு வந்த புதிதில் எனக்கு சினிமா அனுபவம் இல்லை. ஷூட்டிங்கில் நடப்பவை அனைத்தும் திரைத்துறையின் இயல்பான நடைமுறை என்று நினைத்தேன். ஷூட்டிங்கின் போது ஒரு காட்சி அதிகமான பாலியன் தன்மையுடன் எடுக்கப்படுகிறது என்ற அனுபவம் இன்மையால் என்னால் உணர முடியவில்லை.

படம் ரிலீஸாகி திரையில் பார்க்கும்போது, அது தேவையற முறையில் படமாக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன். தெலுங்கில் அறிமுகமான படத்தில் கிளாமரை வெளிப்படுத்துவதாக கூறி என் வயிற்றின் மீது தேங்காய் எறியப்பட்டது. வயிற்றில் தேங்காய் அடிப்பதில் என்ன கவர்ச்சி இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார் டாப்ஸி.