அடுத்தவர்களுக்கு வழி விட வேண்டும்.. நேரடியாக பிரியங்காவிடம் சொன்ன தொகுப்பாளினி டிடி

Priyanka Deshpande Dhivyadharshini TV Program
By Bhavya Mar 15, 2025 10:30 AM GMT
Report

திவ்யதர்ஷினி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.

இவர் பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அறிமுகமானார். தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

அடுத்தவர்களுக்கு வழி விட வேண்டும்.. நேரடியாக பிரியங்காவிடம் சொன்ன தொகுப்பாளினி டிடி | Dd Open Up About Priyanka On Stage

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி தான். பின் இவர் உடல் நிலை காரணமாக விலகி இருந்தார்.

மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட விஷயம் பலரும் அறிந்த ஒன்றே.

 டிடி ஓபன் 

இந்நிலையில், திவ்யதர்ஷினி பிரியங்கா குறித்து பெருமையாக பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்தவர்களுக்கு வழி விட வேண்டும்.. நேரடியாக பிரியங்காவிடம் சொன்ன தொகுப்பாளினி டிடி | Dd Open Up About Priyanka On Stage

அதில், " எனக்கு பிரியங்காவை பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது. எந்த இடத்திலும் இறங்கி அடித்து வேலை செய்யும் நபர் பிரியங்கா. எங்களை பார்த்து மேலே வந்தாக அவர் கூறினார். பொதுவாக நாம் அடுத்தவர்களுக்கு வழி விடுவது தப்பு ஒன்றும் இல்லை" என்று கூறியுள்ளார்.