காதல்-ன்னா இப்படித்தான் இருக்கும்!! விவாகரத்துக்கு பின் புலம்பும் தொகுப்பாளினி டிடி..
சின்னத்திரை தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஸ்டார் விஜய் டிவியில், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பிடித்து வந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி, மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்தார். இதற்கு காரணம் டிடி சிலருடன் நெருக்கமாக இருந்தது என்று கிசுகிசுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளையும் திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். சமீபத்தில் கிளாமர் லுக்கிற்கு மாறிய டிடி காலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் 15 நிமிடம் கூட தொடர்ந்து நிற்கமுடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு DD’s Green Mic என்ற நிகழ்ச்சியில் காதல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.
நாம என்ன தப்பு செய்தோம், நான் என்ன சொன்னோம், நம் மீது என்ன தப்பு என்று யோசித்தால் தான் நம்மை விட்டு ஏன் அவர்கள் சென்றார்கள் என்று தெரியும் என்று விளக்கம் கொடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவாகவும் காதலை கிண்டல் செய்தும் விமர்சித்து வருகிறார்கள்.