ஜேசன் சஞ்சய்யை என்ன வளர்த்தாலும் உள்ளே அவருக்கு!! விஜே டிடி சொன்ன வார்த்தை...

Dhivyadharshini Soori Nivin Pauly jason sanjay C Joseph Vijay
By Jai Oct 01, 2026 12:02 PM GMT
Report

ஜேசன் சஞ்சய்

சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் - சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய். நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் நாளை அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

ஜேசன் சஞ்சய்யை என்ன வளர்த்தாலும் உள்ளே அவருக்கு!! விஜே டிடி சொன்ன வார்த்தை... | Dd Praises Vijays Son Says Hes Very Talented

இப்படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வரும் ஜேசன், தெளிவாக ஒரு மெச்சூரிட்டியுடன் பேசி வருவதை பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் டிடி, ஜேசன் சஞ்சய் பற்றி பேசிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏழு கடல் ஏழு மலை பட பிரமோஷனுக்காக சூரியை பேட்டி எடுத்த டிடி, ஜேசன் சஞ்சய் பற்றி கேள்வி கேட்டார்.

அதற்கு சூரி, என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும், எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். இந்த படம் பெரிய வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள் என்றார்.

ஜேசன் சஞ்சய்யை என்ன வளர்த்தாலும் உள்ளே அவருக்கு!! விஜே டிடி சொன்ன வார்த்தை... | Dd Praises Vijays Son Says Hes Very Talented

அப்போது குறுக்கிட்ட டிடி, ஜேசன் ரொம்ப திறமையான பையன், அவருக்கு ரொம்ப நல்ல குணம், நல்ல தம்பி. அருமையாக வளர்த்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன வளர்த்தாலும் உள்ளே அவருக்குள் ஒன்று இருக்கும்தானே, அதை பார்க்கும்போது இந்தத் தம்பி நல்லா வரணும் என்று சொல்ல தோன்றுகிறது என்று டிடி பெருமையுடன் பேசியுள்ளார்.