டிடி-லாம் யாரு கூப்பிட்டது? கடுப்பாகி கோபத்தில் வெளியேறிய பிரபல நடிகர்.. வீடியோ
பிரபல பாலிவுட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ஷாம்ஷீரா என்ற படம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகையும் ரன்பீர் கபூரின் மனைவியுமான ஆலியா பட் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக நடித்து வெளியாகவுள்ள படமாக ஷாம் ஷீரா அமையவுள்ளது. இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் ரன்பீ - ஆலியா மும்முரமாக கலந்து கொண்டு வருகிறார்கள். ஆலியா தற்போது தான் கர்ப்பமாக இருப்பதால் சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் ரன்பீர் கபூருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தொகுப்பாளினி டிடி-யும், குக்வித் கோமாளி சிவாங்கியும் இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வந்தனர்.
தற்போது பிரமோஷனுக்காக ரன்பீர் சிங்குடன் எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் டிடி காமெடியாக பிரமோஷன் செய்ததை அவர் பாணியில் கோபமாக டிடி-லாம் யாரு கூப்பிட்டது என்று பேசியுள்ளார்.
பிரமோஷன் பண்ண வேற ஐடியா கிடைக்கலையா டிடி. அவர் எவ்வளவு பெரிய நடிகர் கொஞ்சம் சீரியஸாக பண்ணி இருக்கலாமே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.