சீரியலுக்காக பெண்ணாக மாறிய நடிகர்! அதுவும் இப்பயொரு கதாபாத்திரமா? புகைப்படம்

actor vanathaipola
By Edward Oct 13, 2021 10:25 PM GMT
Report

தமிழ் தொலைக்காட்சிகளில் 90ஸ் கிட்ஸ்களை மகிழ வைக்கும் சீரியல் இருக்கிறது. அதே சமயம் டிஆர்பியையும் உயரத்துக்கு கொண்டு செல்லும் சீரியல்களும் இருக்கிறது. அதில் ஓரளவிற்கு மக்கள் மனதில் நல்ல ஈர்ப்பை பெற்று வரும் தொடர் வானத்தைபோல.

அண்ணன் தங்கை உறவினை காட்டி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் சமீபத்தில், சில காரணங்களால் தன்னுடைய மாமா முத்து பாண்டியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார் துளசி. ஆனால் செய்யாத தவறுக்காக துளசியுடன் கெட்ட பெயர் எடுத்துள்ள வெற்றியை இந்தத் திருமணத்தை நிறுத்தி துளசியை கரம் பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார்.

இதற்காக இவர் பெண் வேடமிட்டு நடித்துள்ளார். வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாகியுள்ளது.