நயன்தாரா குரலை கெடுக்காமல் பார்த்துக்கொண்ட அட்லீ!! சிதறாமல் காப்பாற்றிய நடிகை..
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து தற்போது பாலிவுட்டில் காலெடி எடுத்து வைத்துள்ளவர் நடிகை நயன் தாரா. ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லீ இயக்கத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு முதல் நாளில் 110 கோடி அளவில் வசூலை வாரிகுவித்துள்ளது.
இந்நிலையில் நடிகை நயன் தாரா விசயத்தில் கவனமாக செயல்பட்ட அட்லீ, கவர்ச்சியிலும் அவரது குரலிலும் குறை வைக்கவில்லையாம்.
பாலிவுட் ரேஞ்சிற்கு கவர்ச்சி காட்டாமல் நடிக்க வைத்திருக்கிறார். அதேபோல் தமிழில் பல ஆண்டுகளாக நயனுக்கு வாய்ஸ் கொடுக்கும் நடிகையும் டப்பிங் ஆர்ட்டிஸ் தீபா வெங்கட்டை தான் பேச வைத்திருக்கிறார்.
அவரின் குரலுக்கு பங்கம் விளைவிக்காத வண்ணம், அட்லீயின் ராஜா ராணி, பிகில் படங்களுக்கு டப்பிங் கொடுத்த தீபாவை பயன்படுத்தியது அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது. இதற்காக தீபா வெங்கட் அட்லீக்கு நன்றி கூறி அவருடன் எடுத்த புகைப்படதையும் பகிர்ந்துள்ளார்.