மூடிக்கிட்டு இருக்கணும் அவர பத்தி எனக்கு தெரியும்!! சிவகார்த்திகேயன் - இமான் விசயத்தில் தீபக் சொன்ன விசயம்..
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு வாரகாலமாக மிகப்பெரியளவில் குண்டைத்தூக்கி போட்டு வரும் விசயம் சிவகார்த்திகேயன் - இமான் பிரச்சனை தான். ஒரு பேட்டியில் எனக்கு துரோகம் செய்துவிட்டார் சிவகார்த்திகேயன், அதனால் இந்த ஜென்மத்தில் அவருடன் சேரப்போவதில்லை என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு பலர் முன்னாள் மனைவி மோனிகாவும் தொடர்பு என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் மோனிகாவே, இமானுக்கும் எனக்கும் ஏற்பட்ட விவாகரத்தை நிறுத்த முயற்சி செய்ததை இமான் அப்படி கூறினார் என்றும் தெரிவித்தார். இதுபற்றி இணையத்திலும் பிரபலங்களும் பல விசயங்கள் பகிர்ந்து வந்த நிலையில்,
சிவகார்த்திகேயனின் ஆரம்பகால நண்பர் மற்றும் நடிகரான தீபக் கடுமையாக சாடி பேசியிருக்கிறார். ஒருவரின் வாழ்க்கை பற்றி வெளியாகும் செய்திகளில் மோசமான தலைப்புகள், புகைப்படங்கள் பார்வையாளர்களை கவர வைக்கிறார்கள். ஆனால் அதை பார்த்தாலோ படித்தாலோ விசயம் இருக்காது என்று இப்படியான நபர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் சிவகார்த்திகேயன் குறித்த உண்மையை தெரியாதவர்கள் மூடிக்கிட்டு இருக்கணும். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும், சிவகார்த்திகேயனுக்கு நான் ஒன்று சொல்கிறேன், சிவா நீ ஆசைப்பட்ட எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது.
நீ இதே
வேகத்தில் பயணித்து உன்
வேலைகளில் கவனமாக
இருப்பாய் என்று எனக்கு தெரியும்.
கவனத்தை சிதறவிடாமல்
இன்னும் உச்சங்களை
தொடவேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன் என்று
வீடியோவை பகிர்ந்திருக்கிறார்
நடிகர் தீபக்.