இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்!! டாப் நம்பர் 1 நடிகையாக தீபிகா படுகோன்..
தீபிகா படுகோன்
பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தீபிகா படுகோன், நாக அஷ்வின் இயக்கும் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் ஷூட்டிங்கிற்கு வரும் தீபிகாவுடன் 23 உதவியாளர்கள் வருகிறார் என்றும் 8 மணிநேரம் மட்டும் தான் நடிக்க முடியும் என்றும் பல கண்டீஷன்களை போட்டதால் தான் நீக்கப்பட்டார் என்ற காரணம் வெளியானது.
அதே நேரத்தில் ஐஎம்டிபி வெளியிட்ட 25 ஆண்டுகால இந்திய சினிமா குறித்த சிறப்பு அறிக்கையில், எந்த பிரபலம் அதிகமாக தேடப்பட்டார் என்ற பட்டியலின் 2000 - 2025 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் பிரபலமான முதல் 5 திரைப்படங்களின் லிஸ்ட் வெளியானது.
மொத்தம் 130 படங்களில் தீபிகா படுகோன் நடித்த 10 படங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஷாருக்கானின் 20 படங்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில்ம் அமீர் கான், ஹிருத்திக் ரோஷன் தலா 11 படங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆலியா பட் ஆகியோர் இந்த பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார்கள். நடிகைகளில் அதிகம் தேடப்பட்ட நடிகையாக தீபிகா படுகோன் முதலிடம் பிடித்துள்ளார்.
விடாமுயற்சி
இதுகுறித்து தீபிகா படுகோன், என் தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே, ஒரு பெண்ணாக நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று பல ஆலோசனைகள் எனக்கு பல இடங்களிலிருந்து வந்தன. நான் ஒருபோதும் பயப்படவில்லை, கேள்விக்கேட்க தயங்கியதில்லை.
சற்று கடினமான பாதையை தேர்வு செய்து அனைவரும் பழக்கப்பட்ட ஸ்டீரியோ டைப்பை உடைத்து, ஒரு புதிய பாதையை உருவாக்க முயன்றேன்.
அதுவே என்னை தற்போதுள்ள நிலைக்கு கொண்டு வந்தது. என் குடும்பத்தினர், ரசிகர்கள், சக ஊழியர்கள் என் மீது வைத்த நம்பிக்கை, தைரியமான முடிவுகளை எடுக்க எனக்கு உதவியது அவர்களின் நம்பிக்கையை என் பலமாக மாற்றியது.
IMDB அறிக்கை எனக்கு மேலும் தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. நேர்மை, விடாமுயற்சியுடன் முன்னேறினால் மாற்றம் சாத்தியம் என்று அந்த அறிக்கை எனக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளதாக தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.