நாம எல்லாருமே பாவிங்க தான், ஆனா!! மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி போஸ்ட்..
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா பற்றிய விவகாரம் தான் டாப் ஹைலெட் நியூஸாக சமீபகாலமாக இருந்து வருகிறது.
தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவருடன் நெருக்கமாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை ஜாய் இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பலர் விமர்சித்து பேசியநிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, இந்த விவகாரம் குறித்த மறைமுகமாக ஒரு கருத்து பதிவினை முதன்முதலாக பகிர்ந்துள்ளார்.
ஸ்ருதி போஸ்ட்
அதில், நான் சம்மதம் கொடுத்தேனா இல்லையா? என்று தெரியாமல் வெளியுலகம் பேசுகிறது. நாம் அனைவர்மே நம் வாழ்க்கையில் சில தவறுகளை செய்கிறோம். ஆனால் நமக்கு ஏற்புடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு, பிறர் செய்யும் தவறுகளை மட்டும் கண்டிப்பது ஏன்? என்று அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.
ஸ்ருதியின் இந்த பதிவு தன் கணவர் பற்றியோ, வேறு யாரை பற்றியோ கூறாமல் பொதுவான மனித இயல்பை விமர்சனம் செய்வது போல் பேசியிருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறார்.