பர்ஸ்ட் அவங்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.. எனக்கு அதான் பயம்!! நடிகை அனுபமா ஓபன் டாக்..

Anupama Parameswaran Indian Actress Tamil Actress Actress
By Edward Oct 01, 2025 04:15 PM GMT
Report

அனுபமா பரமேஸ்வரன்

மலையாள சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற படங்களில் ஒன்று பிரேமம். இப்படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இப்படத்தை தொடர்ந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா, தற்போது, நடிகர் துருவ் விக்ரமுடன் பைசன் படத்தொலும், கிஷ்கிந்தபுரி என்ற படத்தில் இளம் இயக்குநர் கெளஷிக் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பர்ஸ்ட் அவங்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.. எனக்கு அதான் பயம்!! நடிகை அனுபமா ஓபன் டாக்.. | There Is No Connection Between Studies And Acting

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், பள்ளி பருவ நினைவுகள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் என் பள்ளியில் முதலிடம் பிடிக்கிறவர்களுக்கு தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், நன்றாக படிப்பவர்களால் தான் பெரிய வசனங்களை மனப்பாடம் பண்ணிச்சொல்ல முடியும்.

அது என் மனதில் ஆழமாக பதிந்தது. ஆனால் நான் பள்ளியில் டாப்பர் இல்லை, இதனால் நடிக்க முடியாது என்ற பயத்தால் நடிகையாக வேண்டும் என்ற என் கனவை ஒதுக்கி வைத்தேன். பின் நான் வளர்ந்தப்பின் தான் படிப்புகும் நடிப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரியவந்தது என்று அனுபமா தெரிவித்துள்ளார்.