கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை தீபிகா படுகோன்!! வைரலாகும் வீடியோ..
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் பெரும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதல் ஜோடிகளாக பாலிவுட் சினிமாவில் ஜொலித்து வந்துள்ளனர்.
தீபிகா படுகோனேவின் நடத்தையால், இருவரும் பிரியவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சில காலமாக கணவருடன் சேர்ந்து இல்லாமல் படங்களில் பிஸியாக இருந்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்திய விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் வகையில் மும்பையில் விருது விழா நடைபெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சிக்கு ஜோடியாக ரன்வீர் சிங் - தீபிகா படுகோனேவும் வந்திருந்தனர். ரெட் கார்பேட்டின் போது தீபிகாவை கைப்பிடிக்க சென்ற ரன்வீர் சிங்கிடம் கைக்கொடுக்க மறுத்துள்ளார்.
இதனை பலர் விமர்சித்தபடி இருவருக்கும் பிரச்சனை என்பதால் தான் தீபிகா இப்படியாக நடந்து கொண்டார் என்றும் இருவரும் பிரிந்து வாழப்போவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பலர் தீபிகா செயலை கண்டித்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Poor Ranveer The way she ignore him ???? pic.twitter.com/Dv33vRrOut
— . (@Rolex_S8) March 23, 2023