ரன்வீர் சிங், தீபிகா படுகோண் தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு.. மகனா, மகளா?
Deepika Padukone
Ranveer Singh
By Kathick
இந்தியளவில் பிரபலமான நட்சத்திர ஜோடி ரன்வீர் சிங், தீபிகா படுகோண். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு இருவரும் சினிமாவில் பிசியாக இருந்த வந்த நிலையில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை தீபிகா படுகோண் தான் கர்ப்பமாக இருப்பதாக கணவருடன் இணைந்து புகைப்படத்தை எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தார்.
சமீபத்தில் கூட தனது கணவர் ரன்வீர் சிங் உடன் இணைந்து Pregnancy போட்டோஷூட்டை நடத்தினார் தீபிகா. இந்த நிலையில், இன்று நடிகை தீபிகா படுகோன் - ரன்வீ சிங் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆம், நட்சத்திர ஜோடிகளான தீபிகா படுகோண் - ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.