கொஞ்சமாவது கூச்ச நாச்சம் இருக்கா? நீட் விவகாரத்தில் தேவதர்ஷினியை வெளுக்கும் பிரபலம்..
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் ஒருசில படங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் CJP மாணவர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

தேவதர்ஷினி
அதில் கலந்து கொண்ட நடிகை தேவதர்ஷினி, இந்த காலத்து மாணவர்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஒரு தாயாக பார்த்தபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என் மகளும் பல விஷயங்களுக்காக ஆர்பாட்டத்தில் ஈடுபடுவாள். அப்படி இருக்கும்போது அவளது பாதுகாப்பு என்னவாகும் என்று யோசித்தபோது உண்மையில் என் வயிறெல்லாம் கலங்கிவிட்டது.
தேவதர்ஷினியின் வீடியோ இணையத்தில் பரவிய சில மணி நேரத்தில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், நடிகை தேவதர்ஷினி ஒரு பிரபல நீட் கோச்சிங் அகாடமி விளம்பரத்தில் நடித்து, மாணவர்களை நீட் தேர்வுக்கு தயாராகும்படி விளம்பரப்படுத்தியிருக்கிறார். அந்த பழைய வீடியோவை பதிவிட்டு, இவங்களுக்கு எல்லாம் கொஞ்சமாவது கூச்ச நாச்சமே இருக்காதா? என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.
இதுங்களுக்கு கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இருக்காது pic.twitter.com/NwS8PlulB3
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) July 24, 2026