இயக்குநருடன் காதல் திருமணம்!! நடிகை தேவயானியின் கல்யாண செலவு எவ்வளவு தெரியுமா?
தேவயானி - ராஜகுமாரன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் நடிகை தேவயானி, 2001ல் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.
மகள் இனியாவை சரிகமப சீசன் 5ல் அறிமுகப்படுத்தி போட்டியாளராகவும் பங்கேற்க வைத்துள்ளார். சமீபத்தில் சித்ரா ராமகிருஷ்ணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் ராஜகுமாரன், திருமணம் மற்றும் தேவயானியுடனான வாழ்க்கை எப்படி தொடங்கியது பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், எனக்கு செலவே இல்லை, நான் சிங்கில் ரூமில் இருக்கும்போது மடஹ்ம் எனக்கு ரூ. 1000 தான் செலவு. மேல்மாடியில் இருக்கும் குடும்பத்தினரிடம் மாதம் ரூ. 500 கொடுத்தால் காலை, இரவு சாப்பாடு கொடுத்துவிடுவார்கள். மதியம் படப்பிடிப்பில் சாப்பிட்டுக்கொள்வேன்.
கல்யாண செலவு
நீ வருவாய் என படத்தின் போது எனக்கு கொடுத்த கடைசி சம்பளம் ரூ. 50000. விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திற்காக 1 லட்சம் அட்வான்ஸ் பணம் வாங்கி வீட்டு ஓனரிடம் கொடுத்து வைத்திருந்தேன். அவர் பேங்கில் போட்டு வைத்தார். அதில் 2 லட்சம் இருந்தது. அதை வைத்து கல்யாணம் நடத்தினோம்.
வீட்டிலிருந்து தேவயானி ஒரு ட்ரெஸ் கூட எடுத்து வரவில்லை. அவருக்கு தேவையான ட்ரெஸ் எடுத்தோம். கல்யாணத்துக்கு அரை பவுன் தாலியுடன் சேர்த்து ரூ. 12 ஆயிரம் தான் செலவு ஆச்சு. திருத்தணியில் கல்யாணம், ரெண்டு கார் வைத்து, 10 பேருக்கு சாப்பாடு போட்டோம்.
பட்டு வேட்டி, பட்டுப்புடவை என அனைத்துமே இந்த செலவில் முடிந்தது. திருமணத்திற்கு பின் கார் இல்லாத குறை இருந்ததால், கார் சுந்தரம் என்பவர் மூலம் ஃபோர்ட் ஐகான் என்ற சிகப்புநிற காரை வாங்கினோம் அப்படி தான் எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம் என்று ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.