இதனால் தான் ராஜகுமாரனை நான் காதலித்தேன், உண்மையை உடைத்த தேவயானி

Devayani Actress
By Tony Dec 15, 2025 07:30 AM GMT
Report

தேவயானி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர். இதில் காதல் கோட்டை படம் தான் இவருக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து சூர்யவம்சம், நீ வருவாய் என, ப்ரண்ட்ஸ் என நடித்து அசத்தினார்.

இதனால் தான் ராஜகுமாரனை நான் காதலித்தேன், உண்மையை உடைத்த தேவயானி | Devayani Talk About Her Husband Rajakumaran

இந்நிலையில் தேவயானி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஏன் ராஜகுமாரன் அவர்களை காதலித்து திருமணம் செய்தேன் என கூறியுள்ளார்.

இதில், அவர் சூர்யவம்சம் படத்தில் உதவி இயக்குனர், அப்போது நட்பு தான் ஏற்பட்டது, ஆனால், நீ வருவாய் என படத்தின் போது அவர் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார், அவர் மிகவும் நல்லவர், எனக்கு நடிப்பு என்றால் புடிக்கும், அதை சரியாக வழி நடத்த ஒருவர் தேவை, அந்த வகையில் என்னை நல்ல ஊக்கப்படுத்துவராக ராஜகுமாரன் இருந்தார், அதனால் தான் அவரை திருமணம் செய்தேன் என தேவயானி கூறியுள்ளார்.