இட்லி உப்மா ரகசியம் இதுதான்? நடிகை தேவயானி சொன்னதை கேட்டு வாய்ப்பிளந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் 90களில் வெளியான படங்கள் பெரும்பாலும் மக்கள் மனதில் இன்று வரை புகழப்பட்டு தான் வருகிறது. அப்படி இயக்குனர் விக்ரம் இயக்கத்தில் 1997ல் உருவாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படமாக இருந்தது சூர்யவம்சம்.
சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து தேவயானி, ராதிகா, பிரியா ராமன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவானது. இப்படம் வெளியாகி 25 வருடமாகிய நிலையில் படத்தில் நடித்த சரத்குமார், தேவயானி உட்பட சிலர் கொடுத்த பேட்டி சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதில் நடிகை தேவயானி இட்லி உப்மா ரகசியத்தை கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
இட்லி உப்மா கான்செப்ட்டே விக்ரமன் சாரோடைய ஐடியா தான். எனக்கும் ரொம்ப பிடிக்கும், என் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு என்று கூறியுள்ளார்.
சூரியவம்சம் இட்லி Upma-வின் Idea யாரோடது தெரியுமா? #Devayani #IdliUpma pic.twitter.com/YWRNetrc4Y
— AvalVikatan (@AvalVikatan) July 4, 2022